சாலையில் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சாலையில் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம் பகுதியில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம் பகுதியில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் மழைநீர் தேக்கம்

தாராபுரம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மொய்கவுண்டன்படுகை ஊருக்கு செல்லும் துளசி மேடு பிரதான சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்தசாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

மொய்க்கவுண்டன் படுகை அரசுப்பள்ளி, நஞ்சம்பாளையம் அரசுப்பள்ளி, தாராபுரம் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் அவதிப்பட்டனர். பள்ளிக்கு சைக்கிளை ஓட்டி வந்த மாணவர்கள் சறுக்கி கீழே விழுந்தனர்.அப்போது மாணவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்தனர்.பிறகு அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு மணி நேரத்திற்குள் சாலையில் நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி தருவதாக பொதுமக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story