தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக அரூரில் 47 மி.மீட்டர் பெய்தது


தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை  அதிகபட்சமாக அரூரில் 47 மி.மீட்டர் பெய்தது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:16:09+05:30)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்தது. அதிகபட்சமாக அரூரில் 47 மி.மீ. மழை பதிவானது.

பரவலாக மழை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில் 47 மி.மீ. மழை பெய்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:- தர்மபுரி- 3, பாலக்கோடு- 15.40, மாரண்டஅள்ளி- 27, பென்னாகரம்- 7, ஒகேனக்கல்- 2, அரூர்- 47, பாப்பிரெட்டிப்பட்டி- 17. இந்த மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்திலேயே குளிர் காற்று வீசியது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பல்வேறு ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாய சாகுபடி பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்ய நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மழை விவசாய சாகுபடிக்கு உதவும் வகையில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story