ஊட்டியை போல் மாறிய திருப்பூர்


ஊட்டியை போல் மாறிய திருப்பூர்
x

மாண்டஸ் புயல் எதிரொலியால் திருப்பூரில் நேற்று தொடர்ந்து சாரல் மழை பெய்ததாலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதாலும் ஊட்டியை போல் திருப்பூர் மாறியதாக மக்கள் தெரிவித்தனர். மழையால் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

திருப்பூர்

மாண்டஸ் புயல் எதிரொலியால் திருப்பூரில் நேற்று தொடர்ந்து சாரல் மழை பெய்ததாலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதாலும் ஊட்டியை போல் திருப்பூர் மாறியதாக மக்கள் தெரிவித்தனர். மழையால் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

பள்ளி மாணவர்கள் சிரமம்

வங்கக்கடலில் மாண்டஸ் புயல் மையம் கொண்டதால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் கடும் குளிர் காணப்பட்டது.

நேற்று காலை முதல் தூறல் மழை பெய்தது. இதன்காரணமாக பள்ளிக்கு மாணவ-மாணவிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு எதுவும் இல்லை. இதனால் மழைக்கோட்டு அணிந்தபடியும், குடையை பிடித்தபடியும் குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டில் முடங்கிய மக்கள்

இருசக்கர வாகனத்தில் மழையில் நனைந்தபடியே பெற்றோர் பலர் சிரமத்துடன் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். பகல் முழுவதும் மழை தொடர்ந்து தூறியபடியே இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பகல் நேரத்திலும் மாலை நேரம் போலவே காணப்பட்டது. தொடர் தூறல் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. ஊட்டியில் இருப்பதைப்போல் திருப்பூரை சேர்ந்த மக்கள் உணர்ந்தனர்.

தொழிலாளர்கள், பணிக்கு செல்பவர்கள் மழை கோட்டு அணிந்தபடியே நேற்று வெளியில் சென்றனர். தூறல் மழை விட்டு விட்டு பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்தனர். சாலையோர வியாபாரிகள், மாலை நேர தள்ளுவண்டி கடைக்காரர்கள் தூறல் மழையால் சிரமத்தை சந்தித்தனர். குளிர் காரணமாக மக்கள் நேற்று வீட்டிலேயே முடங்கினார்கள்.

மாண்டஸ் புயல் எதிரொலியால் திருப்பூரில் நேற்று தொடர்ந்து சாரல் மழை பெய்ததாலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதாலும் ஊட்டியை போல் திருப்பூர் மாறியதாக மக்கள் தெரிவித்தனர். மழையால் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.மாண்டஸ் புயல் எதிரொலியால் திருப்பூரில் நேற்று தொடர்ந்து சாரல் மழை பெய்ததாலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதாலும் ஊட்டியை போல் திருப்பூர் மாறியதாக மக்கள் தெரிவித்தனர். மழையால் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவின்படி, திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மில்லி மீட்டர், கலெக்டர் குடியிருப்பு பகுதியில் 2.80 மில்லி மீட்டர், திருப்பூர் தெற்கு பகுதியில் 3 மில்லி மீட்டர், கலெக்டர் அலுவலக பகுதியில் 1 மில்லி மீட்டர், ஊத்துக்குளியில் 1 மில்லி மீட்டர், தாராபுரத்தில் 2 மில்லி மீட்டர், மூலனூரில் 3 மில்லி மீட்டர், உப்பாறு அணைப்பகுதியில் 4 மில்லி மீட்டர், பல்லடத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

இதேபோல் நேற்று அதிகாலை முதலே சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதில் சேவூர், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆலத்தூர், தத்தனூர், பொங்கலூர், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.


Related Tags :
Next Story