காங்கயம் பகுதியில் 13 மி.மீ மழை
திருப்பூர்
காங்கயம் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து காணப்பட்டது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரவு சுமார் 10.30 மணியளவில் மழை லேசான தூறலுடன் தொடங்கி படிப்படியாக வேகமெடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும் தூறல் பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக காங்கயம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 6 மணி வரை காங்கயம் பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Next Story