மழை வெள்ள பாதிப்பு: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


மழை வெள்ள பாதிப்பு: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 8 Dec 2023 7:15 AM IST (Updated: 8 Dec 2023 11:02 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீர் செய்யப்படாத நிலையில், சென்னையில் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் என 2 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story