வெயிலின் தாக்கத்தை தணித்த 'கோடை மழை'


வெயிலின் தாக்கத்தை தணித்த கோடை மழை
x

வெயிலின் தாக்கத்தை ‘கோடை மழை’ தணித்தது.

தஞ்சாவூர்

தஞ்சையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது. அப்போது முதல் வெயில் சற்று தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. திடீரென பெய்த மழையினால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். கடைவீதி, கோவில்களுக்கு வந்த பொதுமக்கள் சாலையோரத்தில் ஆங்காங்கே சிறிது நேரம் ஒதுங்கி நின்றனர். கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றது. ஒருசில பயணிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் பஸ் நிலையத்தில் உலா வந்தனர். கும்பகோணம் பகுதியில் மழையினால் வெப்பம் குறைந்து குளிர் காற்று வீசியது. கோடை வெப்பத்தை தணித்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story