தேனியில் வெயிலை விரட்டிய மழை


தேனியில் வெயிலை விரட்டிய மழை
x
தினத்தந்தி 30 Aug 2023 2:30 AM IST (Updated: 30 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் நேற்று வெயிலை விரட்டும் விதமாக மழை பெய்தது.

தேனி

தேனியில் கடந்த 2 வார காலமாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கோடை காலம் போன்று வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.நேற்றும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்தநிலையில் மாலை 3 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால், நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. கனமழை ஓய்ந்த போதிலும் சிறிது நேரம் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் 2 வாரத்துக்கும் மேல் நிலவிய வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. இரவிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றிய சூழலில், இந்த மழை ஆறுதல் அளிப்பதாக இருந்தது.


Related Tags :
Next Story