மழையால் சேதமடைந்த சாலை சீரமைப்பு
பெரும்பாறை அருகே, மழையால் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்
பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி பகுதியில், மலைப்பாதையோரத்தில் கடந்த மாதம் புதிதாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழையால் அந்த தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் மழையால் சேதம் அடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதைக்கருத்தில் கொண்டு சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைத்து குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது இந்த பணி முழு வீச்சாக நடந்து வருகிறது. இந்த பணியை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story