மழையால் சேதமடைந்த சாலைகள்
சீர்காழியில் பெய்த மழையால் சாலைகள் சேதமடைந்தன
மயிலாடுதுறை
சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மேலும் கன மழையால் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்திற்குள் சேதமடைந்த சாலைகளில் மழை நீர் வடிய வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல் பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். தீபாவளியை முன்னிட்டு தரைக்கடை அமைத்துள்ள வியாபாரிகளும் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சம்பா சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பயன் உள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Related Tags :
Next Story