புதுக்கோட்டையில் 2-வது நாளாக மழை


புதுக்கோட்டையில் 2-வது நாளாக மழை
x

புதுக்கோட்டையில் 2-வது நாளாக மழை பெய்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இரவு வரை இடைவிடாது பெய்தது. அதை தொடர்ந்து நேற்று காலையில் மழைக்கான எந்த அறிகுறியும் இன்றி வெயில் இருந்தது. இந்நிலையில் மாலையில் மேகமூட்டமுடன் வானம் காணப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு வரை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது தீபாவளி விற்பனை நடந்து வருவதால் கீழராஜ வீதி, வடக்கு ராஜ வீதி மற்றும் மேல ராஜ வீதியில் உள்ள துணிக்கடைகளுக்கு மக்கள் நனைந்தபடி சென்றனர். மேலும் சாலையோரத்தில் கடைகள் வைத்திருந்தவர்கள் கடைகளை தார்ப்பாய் போட்டி மூடி தங்கள் பொருட்களை பாதுகாத்தபடி நின்றனர். இரண்டாவது நாளாக பெய்த மழையால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், தீபாவளி விற்பனை பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் வருந்துகின்றனர்.


Next Story