கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை: மணிநதியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மணிநதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது கலவராயன் மலை பகுதியிலும் நீடித்தது. இதன் எதிரொலியாக மணி நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இதை சார்ந்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story