தென்காசியில் திடீர் மழை


தென்காசியில் திடீர் மழை
x

தென்காசியில் நேற்று திடீரென்று மழை பெய்தது.

தென்காசி

தென்காசி:

தென்காசியில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. நேற்று காலையிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. கடும் புழுக்கத்தில் இருந்த மக்கள் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.


Next Story