தாயில்பட்டி பகுதியில் மழை


தாயில்பட்டி பகுதியில் மழை
x

தாயில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, தாயில்பட்டி, ராமலிங்கபுரம், கீழத்தாயில்பட்டி, சேதுராமலிங்கபுரம், மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவியது. தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story