தஞ்சையில் 3-வது நாளாக மழை


தஞ்சையில் 3-வது நாளாக மழை
x

தஞ்சையில் 3-வது நாளாக மழை பெய்தது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கொளுத்துவதும் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மழை இன்றி வெயில் கொளுத்தியது. மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இரவு 9.40 மணி அளவில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. 3-வது நாளாக பெய்த இந்த மழை அரைமணி நேரம் நீடித்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து இரவில் குளிர் நிலவியது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.


Next Story