திருச்சியில் மழை


திருச்சியில் மழை
x

திருச்சியில் மழை பெய்தது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மதியத்துக்கு மேல் லேசாக வெயில் தலை காட்டியது. இருப்பினும் நேற்று காலை முதலே குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியது. மேலும் மாலை 5.30 மணிக்கு பின்னர்Rain in Trichy மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:-

துறையூர்-17, வாத்தலை அணைக்கட்டு-11.20, முசிறி-8, லால்குடி-7.80, சமயபுரம்-7, தா.பேட்டை-6, தேவிமங்கலம்-5.20, தென்புறநாடு-5, பொன்னியாறு அணை-5, மணப்பாறை, புலிவலம்-3, நவலூர் குட்டப்பட்டு-2.60, துவாக்குடி ஐ.எம்.டி.ஐ., கொப்பம்பட்டி-2, திருச்சி நகரம்-1.20, திருச்சி விமானநிலையம்-0.60. மொத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 86.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. சராசரியாக 3.61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Related Tags :
Next Story