சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை.!


சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை.!
x
தினத்தந்தி 3 Nov 2023 7:51 AM IST (Updated: 3 Nov 2023 10:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துவருகிறது. சென்னை சென்டிரல், பெரம்பலூர், வியாசர்பாடி, வில்லிவாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருகிறது.


Next Story