சென்னையின் பல்வேறு இடங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி...!


சென்னையின் பல்வேறு இடங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி...!
x
தினத்தந்தி 9 July 2023 5:45 PM IST (Updated: 9 July 2023 6:17 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் பொதுவான மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா நகர், ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், தியாகராயர் நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பம் அதிகரித்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story