சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...!


சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...!
x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை பரவலாக மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


Next Story