சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு லேசான மழை பெய்தது. சாலிகிராமம், பழைய வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், மெரினா கடற்கரை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
Related Tags :
Next Story