சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை...!
சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
சென்னை,
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசன மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story