சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை


சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
x

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, மாம்பலம், சேத்துப்பட்டு, எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது.

பருவமழைக்காலம் நெருங்கி வரும் சூழ்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story