சென்னையில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை...! - மக்கள் மகிழ்ச்சி
சென்னையின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை,
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்றி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.
இதன் காரணமாக வெப்பம் தணிந்து காற்றுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story