மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x

சென்னை வேளச்சேரியில் மேற்கொள்ளப்படும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கினார்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நேரடியாக சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.


Next Story