சென்னையில் அதிகாலை முதலே ஆட்டத்தை ஆரம்பித்த மழை


சென்னையில் அதிகாலை முதலே ஆட்டத்தை ஆரம்பித்த மழை
x

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது.

மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதலே மழை தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அலுவலகத்திற்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதி அடைந்தனர். அண்ணா சாலை , ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, சென்ட்ரல் , எழும்பூர், கிண்டி, அடையாறு , வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து மழை பெய்தது. தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது


Related Tags :
Next Story