தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை.!


தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை.!
x

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

சென்னை,

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, தருமபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்லூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story