கம்பத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்


கம்பத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
x

கம்பத்தில் பெய்த கனமழையால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கம்பத்தில் இன்று மதியம் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் ஓடைகள் மற்றும் சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல் கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஓடையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சென்றது. அப்போது அப்பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், பெருக்கெடுத்த ஓடிய மழைநீர் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்திற்குள் புகுந்தது.

அப்போது அங்கு குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் நகராட்சி பணியாளர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்பை சரி செய்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது.


Next Story