மவுலிவாக்கம் ஊராட்சியில் ஆறுகளின் பெயர்களை கொண்ட தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்
மவுலிவாக்கம் ஊராட்சியில் ஆறுகளின் பெயர்களை கொண்ட தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மவுலிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கா நகர், ஜீவா நகர், காவேரி தெரு, கோதாவரி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரானது முழங்கால் அளவுக்கு தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக வீடுகளின் படிக்கட்டுகள் வரை சென்ற மழைநீரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக ஊராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே இந்த பகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது என்றாலும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக இந்த பகுதிகளில் ஆறுகளின் பெயர்களை கொண்ட தெருக்களில் மழைநீரானது தேங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.