தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மழை


தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மழை
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீர் மழை பெய்தது.

பருவமழை

தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தூத்துக்குடியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது மேகங்கள் திரண்டு வருவதும், கலைந்து செல்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது.

மகிழ்ச்சி

மாலை 4 மணியளவில் திடீரென லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கு பிறகு இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. சுமார் 5.30 மணி வரை மழை நீடித்தது.

அதன்பிறகு இரவு 7 மணி அளவில் மீண்டும் லேசான மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே மழைநீர் ஓடியது. இதில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. இந்த மழையால் குளிர்ந்த காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story