தாயில்பட்டி பகுதிகளில் மழை


தாயில்பட்டி பகுதிகளில் மழை
x

தாயில்பட்டி பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

சாரல் மழை

தீபாவளிக்கு பண்டிகைக்காக பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 8 நாட்களாக மதியம் 3 மணிக்கு மேல் தாயில்பட்டி, சேதுராமலிங்கபுரம், கோட்டையூர், சல்வார்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, பனையடிப்பட்டி, அன்பின் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் இந்த பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தயார் செய்யப்பட்ட பட்டாசினை சாரல் மழை காரணமாக காய வைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பட்டாசு உற்பத்தி பாதிப்பு

இதுகுறித்து பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூறியதாவது:-

கடந்த 8 நாட்களாக தொடர்ந்து தாயில்பட்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், தயார் செய்த பட்டாசுகளை காய வைக்க முடியாத நிலையும் உள்ளது.

தொடர்மழையின் காரணமாக பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்கனவே பட்டாசு உற்பத்தி 60 சதவீதம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சாரல் மழை காரணமாக உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர். சாரல் மழையினால் இந்த பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story