மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைப்பு
நாட்டறம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி புற வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சாலையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையையொட்டி உள்ள மின் கம்பம் வெளிப்புறமாக இருக்கும்படி அமைக்காமல் மின்கம்பத்துடனேயே மழை நீர் கால்வாய் சேர்த்து கட்டபது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.எனவே ஒப்பந்ததாரர் மீது இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் கம்பத்துடன் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுளங்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story