மழைநீர் வடிகால் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு


மழைநீர் வடிகால் பணிகளை  சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் வடிகால் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளான பாரதிநகர், சாந்திநகர், குமாரசாமி நகர், தங்கமணிநகர், கணேஷ்நகர் மேற்கு, கக்கன்ஜீ நகர், ராஜீவ்நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து குமாரசாமி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை ஆய்வு செய்தார். அத்திமரப்பட்டியில் பணிகள் முடிந்து திறப்பதற்கு ஆயத்தமாக உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.

ஆய்வின் போது உதவி பொறியாளர் குறள் செல்வி, பகுதி செயலாளர் ஆஸ்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story