மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
x

கிள்ளை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூர்

புவனகிரி

கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர் நிலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை பவானி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவி மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளைரவீந்திரன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ஜவகர், அறிவழகன், குமார் உள்பட பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story