பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியது


பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியது
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம்-தென்காசி ெரயில் பாதையில் பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியது

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் ெரயில் பாதையில், பாவூர்சத்திரம் அடுத்துள்ள செல்வ விநாயகபுரத்திலிருந்து மேலப்பாவூர் மற்றும் தண்டவாளத்தின் வடக்கு பகுதியில் உள்ள இடங்களுக்குச் செல்ல ெரயில்வே தரை பாலம் ஒன்று உள்ளது.

இந்த பாலம் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்ல பயன்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்த மழையால் அந்த பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன.


Next Story