மழைநீர் தடுப்பு பணிகள்: ராஜமன்னார் சாலை- பி.டி.ராஜன் சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்


மழைநீர் தடுப்பு பணிகள்: ராஜமன்னார் சாலை- பி.டி.ராஜன் சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
x

ராஜமன்னார் சாலை- பி.டி.ராஜன் சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராஜமன்னார் சாலை- ஆர்.கே.சண்முகம் சாலை சந்திப்பு முதல் பி.டி.ராஜன் சாலை சந்திப்பு வரை மழை காலங்களில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த சாலையின் உயரத்தை அதிகபடுத்த வேண்டிய பணி நடைபெற உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 1-ந்தேதி வரை 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.

2-வது அவென்யூ பி.டி.ராஜன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலை செல்ல பி.டி.ராஜன் சாலை-ராஜமன்னார் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை வழியாக சென்று பி.டி.ராஜன் சாலை-ராமசாமி சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஆர்.கே.சண்முகம் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி ராஜமன்னார் சாலையை அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மித் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி காரணமாக அண்ணாசாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று முதல் அண்ணா சாலையில் இருந்து பட்டுலாஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

ஒயிட்ஸ் சாலையில் இருந்து பட்டுலாஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஸ்மித் சாலை அருகில் உள்ள 'யு டர்ன்' வழி மூடப்பட்டது.


Next Story