தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்


தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கொட்டகையில் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கொட்டகையில் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது.. இங்கு 1,240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் உள்ள 5 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் பழுதடைந்தது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

பின்னர் பள்ளியில் தற்காலிகமாக தகரக் கொட்டகையில் 11 வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் இந்த தகர கொட்டகையில் படித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கும்.மேலும் தகர கொட்டகையினால் அமைக்கப்பட்ட வகுப்பறைகளில் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

வேதாரண்யம் கடற்கரை பகுதி என்பதால் அவ்வப்போது காற்று பலமாக வீசுவதால் தகர சீட்டுகள் பெயர்ந்து விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story