ரெயில் தண்டவாளத்தில் ஜல்லிகற்கள் பராமரிக்கும் பணி
திருப்பூர்
ரெயில் தண்டவாளங்களின் கீழ்பகுதியிலும், பக்கவாட்டிலும் ஜல்லிகற்கள் போடப்பட்டிருக்கும். இந்த ஜல்லிகற்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நவீன எந்திரம் மூலம் சுத்தப்படுத்தி பராமரிக்கும் பணிகள் நடைபெறும். அதன்படி தற்போது உடுமலையில் தண்டவாளத்தில் உள்ள ஜல்லிகற்கள் நவீன எந்திரத்தில் உள்ள கேரியர் மூலம் உள்வாங்கப்பட்டு, அந்த கற்கள் சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் தண்டவாளத்தின் பக்கவாட்டில் போடப்பட்டு சமன்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளின் போது நவீன எந்திரத்தில் கேரியர் மூலம் உள் வாங்கப்படும் ஜல்லிகற்களில் படிந்திருக்கும் மண் தூசிகள் தனியாக பிரிந்து வெளியேறுகிறது. இந்த பணிகள் உடுமலை ரெயில் நிலையம் மற்றும் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள பகுதிகளில் நடந்தது.
---
Next Story