ராஜ கெங்கை அம்மன் திருவிழா
கே.வி.குப்பம் அடுத்த ராஜபாளையத்தில் ராஜ கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது.
வேலூர்
கே.வி.குப்பத்தை அடுத்த ராஜபாளையத்தில் ராஜகெங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கெங்கைஅம்மன் கோவிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் உடலில் பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனம், தீப ஆராதனை, அன்னதானம் வழங்குதல், வாலிபர்களின் கொக்கலிக்கட்டை, சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கூழ் வார்த்தல், கும்ப சோறு படைத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செய்தனர். இரவு வாண வேடிக்கை, ஆன்மீக நாடகம் ஆகியவை நடைபெற்றது.
Related Tags :
Next Story