வன்னியப்பர் கோவிலில் ரூ.1.45 கோடியில் ராஜகோபுர பணி; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவிலில் ரூ.1.45 கோடியில் ராஜகோபுர பணியை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் பழமையான கோவிலான வன்னியப்பர் கோவில் உள்ளது. இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் சிதலமடைந்து காணப்பட்டது. தொடர்ந்து இக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழக அரசு ரூ.9 கோடி ஒதுக்கியது.
தற்போது இதில் முதற்கட்டமாக ராஜகோபுர பணிகளுக்கு ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது.
இந்த பணியை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தொடங்கி வைத்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் விஜய், ஒன்றிய செயலாளர் இளங்கோ, குற்றாலம் கோவில் உதவி ஆணையாளர் கண்ணதாசன், மாவட்ட உதவி பொறியாளர் சகுகுமார், ஆழ்வார்குறிச்சி செயல் அலுவலர் பூதப்பாண்டி, ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தலைவர் சரஸ்வதி சங்கர், கிளை செயலாளர் சங்கர், மாரியப்பன், பொட்டல்புதூர் எம்.எஸ்.பி.சுப்ரமணிய பாண்டியன், வினோத், சைலப்பன், ஆழ்வார்குறிச்சி தி.மு.க. பேரூர் கழக செயலாளர் அழகேசன், துணைச் செயலாளர்கள் ஆர்.எஸ்.பாண்டியன், சகுந்தலா, வார்டு செயலாளர்கள். வெங்கடேஷ், கிருஷ்ணன், பாட்ஷா சேட், ஆட்டோ மாரியப்பன், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பணியாளர்கள், கோவில் கணக்குபிள்ளை மாணிக்கம், அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.