பணம் பறிக்கும் நோக்கில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு சைபர் கிரைம் போலீசில் புகார்

பணம் பறிக்கும் நோக்கில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு சைபர் கிரைம் போலீசில் புகார்
x

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

கருங்கல்:

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வாகிய என்னுடைய பெயரில் எனது புகைப்படத்துடன் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக விரோதிகள் இந்த கணக்கை தொடங்கி பலருடைய இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதில், பண உதவி கேட்டுள்ளனர். எனவே என்னை தொடர்பு கொண்டு, இது உண்மையா என பலர் கேட்டனர்.

போலீசில் புகார்

அப்போது அது சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் என்றும் அப்படி உதவி கேட்டு வரும் எந்த குறுந்தகவலுக்கும் பணம் போடாதீர்கள். அவ்வாறு பணம் வழங்கினால் நான் பொறுப்பு இல்லை என தெரிவித்துள்ளேன்.

எனவே எனது பெயரில் சமூக விரோதிகளால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள சமூக வலை தளங்கள் மூலம் வரும் எந்த குறுந்தகவலுக்கும் பதில் கூற வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். மேலும் இது சம்பந்தமாக காவல்துறையின் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story