ரகோத்தமசாமி பிருந்தாவனம் கோவில் கும்பாபிஷேகம்
மணம்பூண்டி ரகோத்தமசாமி பிருந்தாவனம் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ஸ்ரீ ரகோத்தமசாமி பிருந்தாவனம் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமன்றி இந்திய முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வதால் இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் கும்பாபிஷேகம் கோவில் மடாதிபதி தலைமையில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சோ்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். தொடர்ந்து கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்களுக்கு கோவில் மடாதிபதி அருளாசி வழங்கினார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 450-வது ஆண்டு ஆராதனை விழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி நாளை மறுநாள்(புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் முன்னின்று செய்தனர்.