பரமத்திவேலூரில் போதைபொருட்கள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


பரமத்திவேலூரில்  போதைபொருட்கள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

பரமத்திவேலூரில் போதைபொருட்கள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமை தாங்கி கட்டணமில்லா புகார் எண் 1930 மற்றும் இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்து கூறி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் திருவள்ளுவர் சாலை, பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

முன்னதாக வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்சோ சட்டம், சைபர் கிரைம், மற்றும் மொபைல் போன் மூலம் பேசி பணம் பறிக்கும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story