உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் விழிப்புணர்வு ஊர்வலத்தை நாகை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story