வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்-மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பங்கேற்பு


வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்-மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பங்கேற்பு
x

வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பங்கேற்பு

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்ற வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் செல்லப்பம்பட்டியில் நடந்தது. நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத் தலைவர் லோகநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் பங்கேற்றார். இந்த ஊர்வலமானது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை, கலங்காணி, புதுச்சத்திரம், பாச்சல் வழியாக ஏ.கே.சமுத்திரம் ஆவுடையார் கோவில் சென்று முடிவடைந்தது. இதில் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் தேசியக்கொடியை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் 75-வது சுதந்திர தின விழாவுக்கான பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி அடங்கிய கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த கே.பி.ராமலிங்கம், தமிழக மக்கள் பிரிவினைவாதத்தின் பக்கம் போகாமல், ஒரே நாடு எங்கள் இந்தியா என்கிற உணர்வோடு சுதந்திர தின விழாவை கொண்டாட தொடங்கி உள்ளனர். ஒரே இந்தியா என்ற குரல் உலகெங்கும் ஒலிக்க பிரதமர் மோடி எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, தமிழகம் மிகப்பெரிய ஆதரவை தந்துள்ளது என்றார்.


Next Story