விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஊர்வலம்


விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஊர்வலம்
x

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் ஒன்றிய செயலாளர் முருக செல்வம் வரவேற்றார். பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில சேவா பிரமுகர் கருப்பண்ணன், மாவட்ட செயலாளர் அழகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ். சங்க சாலக் ஒன்றிய தலைவர் குகன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். முன்னாள் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக சிங்கம்புணரி விநாயகர் கோவிலில் இருந்து கிருஷ்ணர் படம் வைத்த வாகன ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் நடராஜன், மூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் ராமசாமி, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் கண்ணையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story