ராசிபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்


ராசிபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
x

ராசிபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

நாமக்கல்

ராசிபுரம்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராசிபுரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் சென்று முடிவடைந்தது. இதில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story