மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:30 AM IST (Updated: 17 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவாரூர்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனுப்பிரியா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் ஆகியோர் ஊர்்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது. இதில் கவுரவ ஆலோசகர் சிவனேசன், தலைமை ஆசிரியர் தெய்வ பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் பெற்றோர்- ஆசிரியர் கழக பொருளாளர் ராஜேஷ், பேரூராட்சி வார்டு உறுப்பினர் வசந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story