கடத்தூரில் வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி
மொரப்பூர்:
கடத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரா இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊரக வாழ்வாதார இயக்க கடத்தூர் வட்டார இயக்க மேலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கடத்தூர் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், வட்டார கல்வி அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
Next Story