பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:45 AM IST (Updated: 22 Dec 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி ஊராட்சி சார்பில் சர்வதேச பெண்கள் வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருக்கண்ணங்குடி ஊராட்சி தலைவர் செல்வமணி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பெண் கல்வியை ஊக்குவிப்போம், பாலின வன்கொடுமையை ஒழிப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி மகளிர் சுய உதவி குழுவினர், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், பெண் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story