பாலக்கோடு பேரூராட்சியில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்


பாலக்கோடு பேரூராட்சியில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:16:50+05:30)
தர்மபுரி

தர்மபுரி:

பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் புகையில்லா போகியை கொண்டாட அறிவுறுத்தினர். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிக்காமல் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரசாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் ஜெயந்தி மோகன், ரவி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story