கலப்பம்பாடி அரசு பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


கலப்பம்பாடி அரசு பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 10:56 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள கலப்பம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கொப்பலூர் பஸ் நிறுத்தம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, வாகனத்தில் சென்றவர்களுக்கு நோட்டீசுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஊர்வலத்தில் உடற்கல்வி ஆசிரியர் சாமுவேல் வில்லிங்டன், ஆசிரியர்கள் முருகன், ஈழவேந்தன், நாகேந்திரன், சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story